அரச அலுவலகங்களில் வலது குறைந்தோருக்காக ஆரம்பிக்கப்படும் விசேட பிரிவு!
அரச அலுவலகங்களில் வலது குறைந்தவர்களுக்கு தனியான ஒரு பிரிவை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிகளைச் சமர்ப்பித்து உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இலகுவான சேவை
வலது குறைந்தவர்களுக்கு வழங்கும் சேவை மேம்படுத்தும் பொருட்டு, இலகுவான சேவையை வழங்கும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, அரச அலுவலகங்களுக்குச் செல்லும் வலது குறைந்தவர்கள், தங்களுடைய சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக காத்திருந்து, சிரமப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஒவ்வொரு அரச அலுவலகங்களிலும் இந்த சிறப்புப் பிரிவு ஆரம்பிக்கப்படும் எனவும், வலது குறைந்தவர்கள் எவ்வித சிக்கல்களும் சிரமங்களும் இன்றி தங்களுடைய சேவைகளை ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு பணிகளுக்கும் தனித் தனிப் பிரிவுகளுக்குச் செல்லாமல், அனைத்துச் சேவைகளையும் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளும் வகையில் இந்தப் பிரிவு அமைக்கப்படும் என ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
மின்னஞ்சலில் வந்த மிரட்டல்... ஐரோப்பிய நாடொன்றில் 6300 பாடசாலைகளில் மாணவர்கள் வெளியேற்றம் News Lankasri