பெரும் அச்சுறுத்தலாகியுள்ள பிஏ.2 திரிபு! - கொழும்பில் விசேட பாதுகாப்பு - மதிய நேர செய்திகள் (VIDEO)
ஒமிக்ரோன் வைரசின் ‘பிஏ.2’ என்ற புதிய மாறுபாடு இந்தியா, பிரித்தானியா, டென்மார்க் உள்ளிட்ட 35இற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த மாறுபாடு ஒமிக்ரோன் வைரஸை விட அதிவேகமாக பரவக்கூடியது. அதேபோல எதிர்காலத்தில் தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையின் 74 ஆவது சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு கொழும்பு நகர் உள்ளிட்ட மேல் மாகாணத்தை உள்ளடக்கும் வகையில் விசேட பாதுகாப்பு செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
''சுதந்திர தின நிகழ்வுகளை முன்னிட்டு காவல்துறை விசேட நடவடிக்கைக்கான செயலணி மற்றும் முப்படையினரின் ஒத்துழைப்பு பெறப்பட்டு பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
பாதுகாப்புக் கடமைகளில் 3,000இற்கும் அதிகமான காவல்துறையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்திகள் உள்ளிட்ட மேலும் பல தகவல்களை மதிய நேர செய்தி தொகுப்பில் காணலாம்.