தேர்தலுக்கு பின்னரும் ஒரு வாரத்துக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்
தேர்தலுக்கு பின்னரான வன்முறைகளை தடுக்கும் வகையில், ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பின்னர் ஒரு வார காலத்திற்கு பொலிஸ், விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவத்தினரை உள்ளடக்கிய விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் நாளை மறுதினம் 21 ஆம் திகதி சனிக்கிழமை காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறவுள்ளது.
17 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்கள் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நாட்டை இயக்கப்போகும் அடுத்த ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதில் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தத் தகுதி பெற்றுள்ளனர்.
தேர்தல் தொடர்பான பணிகள்
இந்தநிலையில், ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு தேர்தலுக்கு முன்னைய மற்றும் பின்னரான காலப்பகுதிகளை உள்ளடக்கும் வகையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் வகுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், தேர்தல் தொடர்பான பணிகளுக்காக சுமார் 65,000 பொலிஸார் தேவைப்படுவதாக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 11 மணி நேரம் முன்

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
