வரவு செலவு திட்டத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடு
எதிர்வரும் 12ஆம் திகதி 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ள நிலையில், விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் எதிர்வரும் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளனர்.
மேலும், ஒட்டுமொத்த நாடாளுமன்ற கட்டிடம், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கழிப்பறைகள் அனைத்து இடங்களும் சோதனைக்கு உட்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முடிந்தவரை சாரதிகளுடன் வருமாறு
மேலும் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படும் நாளில் நாடாளுமன்ற வளாகத்தை அண்டிய அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் மற்றும் ஏனைய முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளுக்கு விசேட பாதுகாப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றில் பார்வையாளர்கூடம் அழைப்பு விடுக்கப்பட்ட விருந்தினர்களுக்கு மட்டும் ஒதுக்கப்படும் மட்டுப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு விசேட அழைப்பிதழ்களை அதிதிகளுக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிந்தவரை சாரதிகளுடன் வருமாறு கோரப்பட்டுள்ளதுடன் விருந்தினர்களை அழைத்து வருவதனை தவிர்க்குமாறும் கோரப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்கள்
வாகனங்களை தாமே செலுத்தி வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாடாளுமன்ற சாரதிகள் வாகனங்களை தரித்து நிறுத்துவதற்கு உதவுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற வாகன தரப்பிடம் எதிர்வரும் 12-ம் திகதி மூடப்பட்டு இருக்கும் என்பதுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்கள் விசேட தரிப்பிடம் ஒன்றில் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அழைப்பு விடுக்கப்பட்ட விசேட அதிதிகள் தங்களது அழைப்பிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் தினமன்று நாடாளுமன்ற வளாகத்தை சுற்றிய பகுதிகளில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.