வடக்கின் வீதிப் பாதுகாப்பு குறித்து விசேட செயற்றிட்டம்
வடக்கு மாகாணத்தில் போக்குவரத்துக் கட்டுப்பாட்டையும் வீதிப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில் விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த பொலிஸார் திட்டமிட்டுள்ளனர் என வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக் சி.ஏ.தனபால தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
"வடக்கு மாகாணத்தில் அதிக வாகன விபத்துக்கள் மற்றும் அதிக வாகன நெரிசல் உள்ள பகுதிகள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளன.
பொலிஸாரின் நோக்கம்
அடுத்த சில வாரங்களில் அந்த பகுதிகளில் வாகனங்களை நிறுத்துவதை முறைப்படுத்துதல் மற்றும் கட்டுப்படுத்துதல், புதிய சாலை அடையாள பலகைகள் அமைத்தல், ஓட்டுநர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற பல வேலைத்திட்டங்களை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விபத்துக்களைக் குறைத்து, சீரான போக்குவரத்தையும் வீதி ஒழுக்கத்தையும் பேணும் வடமாகாணத்தை உருவாக்குவதே பொலிஸாரின் நோக்கமாகும்" என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri