விசேட சுற்றிவளைப்பில் சிக்கிய நூற்றுக்கணக்கான சந்தேகநபர்கள்
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 697 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் கீழ் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத போதைப்பொருள்
இதன்போது போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 559 பேரும், குற்றப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ள பட்டியலில் உள்ள 138 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த நடவடிக்கைகளின் போது, 170 கிராம் ஹெரோயின், 113 கிராம் ஐஸ் ரக போதைப்பொருள், 814 கிராம் கஞ்சாவும் 26,186 கஞ்சா செடிகள் உள்ளிட்ட பல சட்டவிரோத போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஜீ தமிழின் பிர்ம்மாண்ட நிகழ்ச்சியான சரிகமப 5வது சீசனில் புதிய நடுவர்.... இனி இசையோடு பஞ்ச் தெறிக்க போகுது.. Cineulagam

இந்திய போர் விமானங்களை வீழ்த்த பாகிஸ்தான் பயன்படுத்திய J-10C., சீனா வெளியிட்ட ஆவணப்படம் News Lankasri

இந்தியாவின் தக்க பதிலடி... துருக்கி, அஜர்பைஜானுக்கு பறக்கும் பாகிஸ்தான் பிரதமர்: அவரது திட்டம் இதுதான் News Lankasri
