நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு: 2,166 சந்தேகநபர்கள் கைது
நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணி நேரத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில், 2,166 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 66 பேருக்கு எதிராக தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன், 14 சந்தேகநபர்கள் தொடர்பில் சொத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
போதைப்பொருள் மீட்பு
மேலும் 226 பேர் புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சுற்றிவளைப்புகளில் 1.3 கிலோகிராம் ஹெரோயின், 566 கிராம் ஐஸ் ரக போதைப்பொருள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன், 7 கிலோகிராம் கஞ்சா மற்றும் 1,075 கஞ்சா செடிகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |