நீண்ட வார இறுதி விடுமுறை! பொதுமக்களிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
எதிர்வரும் நீண்ட வார இறுதி விடுமுறையில் பொது இடங்களுக்குச் செல்லும்போது மக்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு சுகாதார தரப்பினரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இது தொடர்பில் தெரிவிக்கையில், உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டில் உள்ள மக்கள் இவ்வாறான நீண்ட விடுமுறையில் பயணிக்க ஆசைப்படுவதாக தெரிவித்த அவர் முடிந்தவரை பயணங்களை மேற்கொள்ளாமல் இருக்க முயற்சிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
நாட்டில் கிட்டத்தட்ட 15 மில்லியன் மக்கள் இரண்டாவது டோஸை எடுத்துக் கொண்ட போதிலும் இதுவரையில் 5 மில்லியன் பேர் மட்டுமே மூன்றாவது டோஸைப் பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri
