நயினாதீவு அம்மன் ஆலயத்திற்கு வரும் பக்தர்களிடம் விசேட கோரிக்கை
கோவிட் அச்சுறுத்தல் காரணமாக நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு வருகை தருவதனை பக்தர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டுமென ஆலய அறங்காவலர் சபையினர் கோரியுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக ஆலய அறங்காவலர் சபையினர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும்,
‘நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அடியவர்களுடன் நித்திய பூஜைகள் நடைபெறுகின்றன.
எனினும் கோவிட் அச்சுறுத்தல் காரணமாக அபிசேகங்கள், அடியவர்களின் நேர்த்திகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
அவற்றை மீள ஆரம்பிப்பது தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும்.
ஆகவே பக்தர்கள் அனைவரும் தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு ஆலயத்திற்கு வருகை தருவதனை தவிர்த்து, உங்கள் வீடுகளில் இருந்தவாறு அம்பாளை வேண்டிக்கொள்ளுங்கள்’ என கூறப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 6 மணி நேரம் முன்

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan
