கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை!
நாளைய தினம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலைக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena) தெரிவித்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்களின் எதிர்காலம் பெற்றோரின் மகிழ்ச்சி மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்தின் மகிழ்ச்சியும் ஆகும் என அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோர் தலையிட்டு ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நம்பகமான தீர்வை முன்வைத்துள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
இதேவேளை, நாளை முதல் பல கட்டங்களாக பாடசாலைகள் மீளவும் திறக்கப்படுகின்றன. இதன்படி, 200க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் நாளை முதல் தொடங்கும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
மயில் செய்த வேலையால் மொத்தமாக ஜெயில் அனுப்பப்பட்ட பாண்டியன் குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
வாணி ராணி சீரியல் நடிகர் முரளியை நினைவிருக்கிறதா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க.. லேட்டஸ்ட் பேட்டி Cineulagam