விசேட பாதுகாப்பிற்காக களமிறங்கவுள்ள இராணுவம் மற்றும் பொலிஸார்
கிறிஸ்தவ ஆலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் அனைத்து மாகாண உதவிக் பொலிஸ் மா அதிபர்கள், பிராந்திய பொறுப்பதிகாரிகள் மற்றும் காவல் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்கு உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.
வழிபாடு
அத்துடன் நாளை(18) கிறிஸ்தவர்களின் புனிதவெள்ளி வழிபாடும் அதனை தொடர்ந்து உயிர்த்த ஞாயிறு தினமும் நினைவுகூறப்படவுள்ளதால் இந்த விசேட பாதுகாப்பு வழங்கப்படுகின்றது.
இந்த பாதுகாப்புப் பணிகளில் பொலிஸ் அதிகாரிகள், விசேட அதிரடிப் படையினர் மற்றும் முப்படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
அதிக எண்ணிக்கையில் கிறிஸ்தவர்கள் ஒன்றுக்கூடுவர் என எதிர்பார்க்கப்படும் தேவாலயங்களை இனங்கண்டு, அவற்றைச் சூழவுள்ள பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
மேலும், பிரதான தேவாலய வழிபாடுகள் நடைபெறும் இடங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலதிக தகவல் - இந்திரஜித்

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam
