அடுத்த வாரம் முதல் விசேட வேலைதிட்டம்! - இராணுவத் தளபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு (Video)
அடுத்த வாரம் முதல் விசேட தடுப்பூசி வேலைதிட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி பூஸ்டர் தடுப்பூசிக்கான நடமாடும் தடுப்பூசி நிலையங்கள் செயற்படுத்தப்படும் என இராணுவத் தளபதி தெரிவித்தார். தியத்தலாவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அண்மைய நாட்களில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும்,பூஸ்டர் தடுப்பூசியை விரைவாகப் பெற்றுக்கொள்ளுமாறு மக்களை வலியுறுத்த வேண்டும் எனவும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி உள்ளிட்ட கொழும்பு தொலைக்காட்சி ஊடகங்களில் இடம்பிடித்த முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.





ஆனந்தியின் கர்ப்பத்திற்கு மகேஷ் தான் காரணமா... பஞ்சாயத்தில் பரபரப்பின் உச்சம், சிங்கப்பெண்ணே சீரியல் Cineulagam
