வரலாற்று சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் தைத்திருநாளை முன்னிட்டு விசேட பூஜை
தமிழர்களின் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு வரலாற்று சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இன்று பொங்கல் பொங்கி விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.
ஆலய பிரதம குரு கருணாநந்த குருக்கள் தலைமையில் பொங்கல் பொங்கி விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றுள்ளன.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் சுகாதார வழிமுறைகளுடன் இம் முறை ஆலயத்தில் தைப்பொங்கல் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேலும் மன்னாரில் உள்ள இந்து, கத்தோலிக்க ஆலயங்களிலும் பொங்கல் பொங்கி விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.
மன்னார் மாவட்டத்தில் உள்ள இந்து மக்கள் அமைதியான முறையில் பொங்கல் திருநாளை கொண்டாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




முழு பிரித்தானியாவிலும் ஒரு வார வேலைநிறுத்தம்: புலம்பெயர்தல் எதிர்ப்பு அமைப்பு அழைப்பு News Lankasri
நிலா மீது கடும் வருத்தத்தில் இருக்கும் சோழனுக்கு ஷாக் கொடுத்த ஒரு சம்பவம்... அய்யனார் துணை எபிசோட் Cineulagam
கும்ப ராசியில் புதன் பெயர்ச்சி: பெப்ரவரியில் இந்த 3 ராசிக்காரங்களுக்கு ட்ரிபிள் ஜாக்பாட் தான்! Manithan