யுக்திய நடவடிக்கைக்கு ஆசி வேண்டி நல்லூர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடு
பொலிஸாரின் யுக்திய நடவடிக்கைக்கு ஆசி வேண்டி வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றுள்ளது.
குறித்த பூஜை வழிபாடுகள் இன்று (17.01.2024) பொலிஸாரின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.
துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு : கோட்டாபயவின் தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்கி உயர் நீதிமன்றம் உத்தரவு
விசேட பூஜை வழிபாடு
பதில் பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கிணங்க போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டமாகிய யுக்திய நடவடிக்கை பொலிஸாரால் நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் யுக்திய நடவடிக்கைக்கு ஆசி வேண்டி யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பொலிஸாரின் ஏற்பாட்டில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளது.
இந்த விசேட பூஜை வழிபாட்டில் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், யாழ்ப்பாணம் பிராந்திய சிரேஷ்ட அத்தியட்சகர், யாழ்ப்பாணம் பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |