புகையிரத பயணிகளுக்கான தகவல்! அறிமுகமாகும் அவசர இலக்கம்
இலங்கை புகையிரத திணைக்களம் பயணிகளுடன் இலகுவாக தொடர்பு கொள்வதற்காக அவசர இலக்கமொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
அறிமுகமாகும் இலக்கம்
புகையிரத சேவைகள், புகையிரத பயண அட்டவணைகள் அல்லது பிற தொடர்புடைய தகவல்கள் பற்றிய ஏதேனும் கேள்விகளுக்கு திணைக்களத்தை தொடர்பு கொள்ள விரும்பும் பயணிகள் எந்த நேரத்திலும் 1971 என்ற எண்ணை அழைப்பதன் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
இதன் மூலம் பொது மக்கள் மூன்று மொழிகளிலும் (சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம்) திணைக்களத்தை தொடர்பு கொள்ளலாம்.
பெறக்கூடிய தகவல்கள்
புகையிரத இயக்க அட்டவணைகள், இருக்கை முன்பதிவுகள், புகையிரத கட்டணம், புகையிரத திணைக்கள பாதுகாப்பு சேவைகளை தொடர்பு கொள்ளுதல் மற்றும் புகையிரத திணைக்களம் தொடர்பான பிரச்சினைகள் போன்ற தகவல்களை மக்கள் பெறலாம்.
புதிய 24 மணி நேர அவசர எண் நாளை (14) காலை 7 மணிக்குப் பின்னர் செயல்படும்
என அறிவிக்கப்பட்டுள்ளது

இனியா செய்த விஷயம்.. ஷாக் ஆன வில்லன்! நம்பர் 1 ட்ரெண்டிங்கில் பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரோமோ Cineulagam

தித்திப்பான சர்க்கரைப் பொங்கல் ரெசிபி- சர்க்கரை நோயாளருக்கு பாதிப்பு இல்லாமல் செய்வது எப்படி? Manithan
