இந்திய வம்சாவளி வீரரொருவருக்கு அமெரிக்க விமானப்படை வழங்கியுள்ள சிறப்பு அனுமதி
இந்திய வம்சாவளி வீரரொருவருக்கு அமெரிக்க விமானப்படை சிறப்பு அனுமதியொன்றினை வழங்கியுள்ளது.
இதற்கமைய,அமெரிக்க விமானப்படையில் பணியாற்றி வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த தர்ஷன் ஷா என்பவருக்கு முதல் முறையாக பணியில் இருக்கும் போது நெற்றியில் திலகம் அணிய அமெரிக்க விமானப்படை அனுமதியளித்துள்ளது.
" நான் விமானப்படையில் உறுப்பினராக இருக்கும் போது எனது முக்கிய அடையாளங்களில் ஒன்றான சீருடையுடன் திலகத்தையும் அணிகிறேன். இதை அணிவதை சிறப்பாக உணர்கின்றேன். வாழ்க்கையில் கஷ்டங்கள் மற்றும் சிரமங்களை கடந்து செல்ல இது எனக்கு வழிகாட்டுதலை வழங்குகிறது. சீருடையில் இருக்கும் போதும் மத சுதந்திரத்தை வெளிப்படுத்தும் சுதந்திரம் உள்ள நாட்டில் நான் வாழ்வதற்கு பெருமைப்படுகிறேன் " என தர்ஷன் ஷா தெரிவித்துள்ளார்.
அமெரிக்க விமானப்படையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்த மத சுதந்திரத்துக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam