ஒரு லீற்றர் டீசல் 528 ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது
ஒரு லீற்றர் டீசல் 528 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட வேண்டும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
எனினும் மக்கள் மீது கூடுதல் சுமையை திணிக்காதிருக்கும் நோக்கில் தற்பொழுது ஒரு லீற்றர் பெட்ரோல் 392 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.
உலக அளவில் எரிபொருள் விலைகள் குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது இவ்வாறு விலை அதிகரிப்பு பதிவாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் இலங்கை பெட்ரோலிய கூட்டத்தாபனம் சில வகை எரிபொருட்களுக்கான செலவினத்தை ஏற்றுக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு லீற்றர் டீசல் விற்பனையின் போது 136 விலை வித்தியாசம் காணப்படுவதாகவும் இதில் 70 ரூபாவை அரசாங்கம் 66 ரூபாவை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனமும் ஏற்றுக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு டீசலுக்கான மானியத்தை வழங்குவதற்காக மட்டும் அரசாங்கம் 41 பில்லியன் ரூபாவினை ஒதுக்கீடு செய்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
ஒரு லீற்றர் பெட்ரோல் இறக்குமதி செய்வதற்காக 446 செலவிடப்படுகின்றது எனவும் எனினும் இலங்கை பெட்ரோலைக் கூட்டுத்தாபனம் ஒரு லீற்றர் பெட்ரோலை 414 ரூபாவிற்கு விற்பனை செய்வதாகவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
ஒரு லீறற்ர் சுப்பர் டீசல் இறக்குமதி செய்வதற்கு 581 ஒரு ரூபா செலவிடப்படும் அதேவேளை, ஒரு லீற்றர் சுப்பர் டீசல் 528 விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் லீற்றர் ஒன்றுக்கு சுமார் 53 ரூபாய் நட்டத்தை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் ஏற்றுக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் எரிபொருள்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டாலும் உலக அளவில் ஏற்பட்ட விலை மாற்றங்களின் அடிப்படையில் இலங்கையில் விலை அதிகரிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
நுகர்வோருக்கு சலுகை வழங்கும் நோக்கில் அரசாங்கம் எரிபொருள் விலையை குறைத்து விற்பனை செய்வதாக டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்