பொசன் போயாவை முன்னிட்டு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் விசேட சலுகை
பொசன் போயாவை முன்னிட்டு நாட்டில் முதல் தடவையாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் விசேட சலுகை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சேவையானது இன்றும் (19) நாளையும் (20) நாரஹேன்பிட்டியில் உள்ள மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு இலவசமாக ட்யூன்-அப் செய்யப்படும் என திணைக்களம் அறிவித்துள்ளது.
மோட்டார் போக்குவரத்து ஆணையாளர்
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த,
''நாட்டில் அதிகளவான வாகனங்கள் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளாகும். தமது பொருளாதார நிலைக்கு ஏற்ப வாகனங்களை சீர் செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை.
நாட்டின் சாரதிகளை பொருளாதார ரீதியில் பலப்படுத்தவும், அதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் நச்சு வாயு பாதிப்புகளை குறைக்கும் நோக்கில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இதற்கமைய நாட்டின், நிபுணத்துவம் பெற்ற தொழில்நுட்ப வல்லுனர்களை பயன்படுத்தி இந்த செயற்திட்டம் நடத்தப்பட உள்ளது." என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |