அரச நிறுவனங்களில் சேவை பெற வரும் பொது மக்களுக்கு விசேட அறிவிப்பு
அரச ஊழியர்கள் விசேட சேவை முறைக்கமைய பணிக்கு அழைக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எனினும் அதன் ஊடாக பொது மக்களுக்கு சேவை வழங்கும் போது எவ்வித தடையும் ஏற்படாதென அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
பொது மக்களுக்கான சேவையை முழுமையாக வழங்கும் நோக்கில் ஊழியர்களை அழைப்பதற்கு நிறுவனத்தின் பிரதானிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அவசியமான காரணத்திற்காக மாத்திரம் அரச நிறுவனத்திற்கு பொது மக்கள் வருகைத்தர வேண்டும் என அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் நிலைமையை கருத்திற் கொண்டு மக்கள் ஒவ்வொருவரும் பொறுப்புடன் செயற்பட அனைத்து தரப்பினரதும் பொறுப்பாகும்.
நாட்டில் நிலவும் கொரோனா நிலைமைக்கு மத்தியில் அதிகாரிகள் பணிக்கு அழைப்பது தொடர்பில் விசேட சுற்றரிக்கை நேற்று வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
