இதுவரையில் தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாதவர்களுக்கு விசேட அறிவிப்பு
இதுவரையில் கோவிட்19 தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாதவர்களுக்கு விசேட அறிவிப்பு ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு மற்றுமொரு சந்தர்ப்பத்தை வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி, இதுவரையில் தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாதவர்கள் தாமதமின்றி தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி ஏற்றிக்கொள்வதற்கு தகுதியுடைய அனைவரும் தடுப்பூசி ஏற்றிக்கொள்ள வேண்டுமெனவும் அதன் மூலம் அனைவரையும் பாதுகாக்க முடியும் எனவும் சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி ஏற்றிக்கொள்ள தவறியவர்கள் தங்களது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வதந்திகள், பிழையான கருதுகோள்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் சிலர் தடுப்பூசி ஏற்றிக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
