வாகன வருமான அனுமதிப்பத்திரம் குறித்து அதிகாரிகளுக்கு முக்கிய பணிப்புரை
வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்வதில் மேல் மாகாணத்தை ஏனைய மாகாணங்களுடன் இணைக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்வதில் மக்கள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினை மாகாணங்களுக்கிடையிலான தொடர்பின்மை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேல் மாகாணத்தை ஏனைய மாகாணங்களுடன் இணைக்க நடவடிக்கை
இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்த போதும் மிகவும் அத்தியாவசியமான மாகாணமான மேல் மாகாணத்திற்கு இது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்ள மேல் மாகாணத்தை ஏனைய மாகாணங்களுடன் இணைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க உரிய திணைக்களங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்குமாறு மேல்மாகாண ஆளுநருக்கு அமைச்சர் விஜித ஹேரத் பணிப்புரை விடுத்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 4 மணி நேரம் முன்
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri