லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை திருத்தம் குறித்த விசேட அறிவிப்பு
லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையை மாற்றியமைப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
லாஃப்ஸ் நிறுவன குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான நிரோஷன் ஜே பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.
எரிவாயு விநியோகம்
இதேவேளை 22,000 மெட்ரிக் தொன் எரிவாயு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் நாடு முழுவதும் எரிவாயு விநியோகம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஒவ்வொரு நாளும் சுமார் 100,000 விநியோகிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
எரிவாயு தட்டுப்பாடு
நாடு முழுவதும் லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், வீடுகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் 3,000 மெட்ரிக் டன் எரிவாயுவை, மாதாந்த அடிப்படையில் விநியோகம் செய்வதை உறுதி செய்யுமாறு ஜனாதிபதி பணித்திருந்தார்.

இந்த உத்தரவு சமையல் எரிவாயு வழங்கும் முக்கிய நிறுவனங்களில் ஒன்றான லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்திற்கு பிறப்பிக்கப்பட்டது.
இது தொடர்பில், வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake), சமையல் எரிவாயு வழங்குநர் குறைந்தபட்சம் 7,500 மெட்ரிக் டன் எல்பி எரிவாயு இருப்பை கொண்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam