வீட்டு பராமரிப்பில் இருக்கும் கோவிட் தொற்றாளர்கள்! சுகாதார அமைச்சின் விசேட அறிவித்தல்
கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், வீட்டு பராமரிப்பில் இருக்கும் நோயாளர்கள் நிபுணர்களால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்றுமாறு சுகாதார அமைச்சகம் கோரியுள்ளது.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரஞ்சித் படுவந்துடாவ இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், வீட்டு பராமரிப்பில் தங்கியிருப்பவர்களுக்கு சுகாதார ஆலோசனைகளை வழங்க சிறப்பு வைத்தியர்கள், அவசர சேவை மூலம் 24 மணிநேரமும் கிடைக்கின்றனர்.
அறிகுறியற்றவராக இருந்தாலும், பாதிக்கப்பட்ட நபர்கள் அதிகபட்ச எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கோவிட் நோயாளிகள் குறைந்தபட்சம் இரண்டு முதல் மூன்று முறை தங்களது உடல் வெப்பநிலையை சரிபார்க்க வேண்டும்.
மூச்சுத் திணறல் போன்ற சுவாசப் பிரச்சினைகளையும் கண்காணிக்க வேண்டும். எந்த நேரத்திலும், அவசர சேவை மூலம் நிபுணர்களை அழைத்து ஆலோசனை பெற நோயாளிகள் தயங்க வேண்டாம்” என அவர் மேலும் கூறியுள்ளார்.
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri
8 ஆண்டுகளுக்கு பிறகு பேட்டி கொடுக்கப்போகும் நடிகர் ரஜினிகாந்த்... எப்போது, எந்த டிவி, முழு விவரம் Cineulagam