நாட்டு மக்களிடம் தேசிய இரத்த வங்கி விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை கருத்திற்கொண்டு பொதுமக்கள் இரத்த தானம் செய்வதில் கூடுதல் கவனம் செலுத்துமாறு தேசிய இரத்த மாற்று நிலையம் நன்கொடையாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளமையினால் இரத்த நன்கொடையாளர்களிடமிருந்து இரத்தத்தை சேகரிப்பதற்கான விசேட திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய இரத்த மாற்று நிலையத்தின் பணிப்பாளர் வைத்தியர் லக்ஷ்மன் எதிரிசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
புற்று நோய், தலசீமியா, லியுகேமியா போன்ற நோயாளர்களுக்கும், திடீர் விபத்துகளினால் பலத்த காயமடைபவர்கள், அவசர சத்திர சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்ட நோயாளர்கள் மற்றும் பிரசவத்திற்காக உள்ள தாய்மார்களுக்கும், தேவையான இரத்தத்தை குறை இன்றி வழங்குவதற்கு இரத்தம் சேகரிக்கப்பட வேண்டும்.
அத்துடன், ஒவ்வொரு மாதமும் சுமார் ஆயிரம் கர்ப்பிணித் தாய்மார்களின் பிரசவத்திற்கு இரத்தம் தேவைப்படுவதனால், இரத்தத்தின் தேவையை முன்கூட்டியே தயார் நிலையில் வைக்க வேண்டும்.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் 87 இரத்த சேகரிப்பு நிலையங்கள் காணப்படுகின்ற. எனவே,தேசிய இரத்தமாற்று நிலையத்திற்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு, இரத்த தானம் செய்வதற்கான திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்வதன் மூலம் இரத்த தானம் செய்வதற்கு ஒன்றிணையுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
அட சன் டிவி சீரியல் நடிகைகளா இவர்கள், எல்லோரும் எவ்வளவு அழகு பாருங்க... இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam
விஜய் ஆட்சி அமைப்பது குறித்து எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இயக்குனர் திருச்செல்வம் பரபரப்பு வீடியோ... இதோ Cineulagam
ஜனனி சொன்ன ஒரே ஒரு விஷயம், ஷாக்கான ஈஸ்வரி, கதிர் போடும் திட்டம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
ஸ்ருதி வீட்டு உணவால் அவதிப்படும் விஜயா, எலி தொல்லையில் மாட்டிக்கொண்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam