தபால் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல்
உத்தியோகபூர் வாக்காளர் அட்டைகள் தபால் மூலம் கிடைக்காத வாக்காளர்களுக்கு தபால் திணைக்களம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் அஞ்சல் மூலம் இதுவரை கிடைக்கவில்லை என்றால், தமக்கு கடிதங்கள் கிடைக்கப்பெறும் தபால் நிலையத்திற்குச் சென்று அடையாளத்தை உறுதி செய்வதன் மூலம் அதைப் பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விசேட அறிவித்தல்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறும் மே 6 ஆம் திகதி மாலை 4.00 மணி வரை இந்த வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும் என தபால் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் ஞாயிற்றுக்கிழமை (27) விசேட தபால் சேவை ஊடாக விநியோகிக்கப்படும், வாக்காளர் அட்டை விநியோக பணிகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடையும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri
