பொலிஸ் நற்சான்றிதழ் பெற விண்ணப்பித்த விண்ணப்பதாரிகளுக்கு விசேட அறிவித்தல்
பொலிஸ் நற்சான்றிதழ் வழங்கும் இணையத்தள கட்டமைப்பு செயலிழந்த தினத்தில் விண்ணப்பித்த விண்ணப்பதாரிகளுக்கு தங்கள் விண்ணப்பங்களை மீண்டும் சமர்ப்பிக்குமாறு விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப்பிரிவினால் இது தொடர்பான விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பொலிஸ் தலைமையகத்தினால் வழங்கப்படுகின்ற பொலிஸ் நற்சான்றிதழ்கள், பத்தரமுல்ல, சுஹூருபாய கட்டிடத்தின் 17ஆம் மாடியில் அமைந்துள்ள நற்சான்றிதழ் பிரிவினால் நிருவகிக்கப்படுகின்றன.
பொலிஸ் நற்சான்றிதழ் சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்கள், அது தொடர்பான அறிக்கைகளைப் பெறுதல் மற்றும் சான்றிதழ்களை அச்சிடுதல் போன்ற செயற்பாடுகள் கணினிமயப்படுத்தப்பட்ட தரவு அமைப்பு ஊடாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறித்த தரவு அமைப்பானது கடந்த 2026 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 20 ஆம் திகதியன்று பிற்பகல் 12.50 மணிக்குச் செயற்பாடற்ற நிலைக்குள்ளானது.
ஏற்பட்ட செயலிழப்பு
இது குறித்து இலங்கை தகவல் மற்றும் தொழில்நுட்ப முகவர்களுக்கு (ICTA) அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமைப்பை மீள இயங்கச் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

அதற்கமைய, விண்ணப்பதாரர்கள் தற்போது வழமை போன்று இணையம் ஊடாகக் பொலிஸ் நற்சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.
இதற்கிடையே கடந்த 2026ஆம் ஆண்டு ஓகஸ்ட் 20ஆம் திகதியன்று தரவு அமைப்பில் ஏற்பட்ட செயலிழப்பைத் தொடர்ந்து, அன்றைய தினம் விண்ணப்பதாரர்களால் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் நற்சான்றிதழ் தரவு அமைப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
எனவே, அந்தத் திகதியில் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த விண்ணப்பதாரர்கள், புதிய விண்ணப்பமொன்றினை மீளவும் இணையவழியில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
புதிய விண்ணப்பத்திற்குரிய சம்பந்தப்பட்ட அறிக்கைகள் பெறப்பட்டதன் பின்னர் பொலிஸ் நற்சான்றிதழ் வழங்கப்படும்.
மேலும், முந்தைய விண்ணப்பத்திற்காகச் செலுத்தப்பட்ட 5,100 ரூபாய் கட்டணமானது, விண்ணப்பதாரர் கட்டணம் செலுத்துவதற்குப் பயன்படுத்திய கடன் அட்டைக்கு (Credit Card) மீளச் (Refund) செலுத்தப்படும் என்றும் பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்காவின் மிக நுணுக்கமான உளவியல் தாக்குதல்.. ட்ரம்ப் கையிலெடுத்துள்ள கடுமையான ஆயுதம்!
தண்ணீர் மற்றும் டின் உணவுகளைச் சேமித்து வைக்குமாறு மக்களுக்கு பிரித்தானியா அறிவுறுத்தல் News Lankasri