ரணில் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள விசேட செய்தி
நாட்டின் வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டு முன்னேற்றப் பாதைக்கு கொண்டு வருவதற்கு கடந்த இரண்டு வருடங்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அளப்பரிய பணியை ஆற்றியுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் இன்று வெளியிட்ட விசேட ஊடக அறிக்கையிலே ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை கூறியுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ''நாட்டின் வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுத்து, ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி, முன்னேற்றப் பாதைக்கு கொண்டு வருவதற்காக கடந்த இரண்டு வருடங்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறப்பான பணிகளை ஆற்றினார்.
வீழ்ச்சியடைந்த பொருளாதாரம்
அனைத்து அம்சங்களிலும் வீழ்ச்சியடைந்திருந்த எமது நாட்டின் பொருளாதாரத்தை மாத்திரமன்றி, ஸ்திரத்தன்மை மற்றும் முன்னேற்றத்திற்கு அவசியமான அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய வகையில் ஜனாதிபதியின் வேலைத்திட்டங்கள் அமைந்திருந்தன.
பொருளாதார பரிமாற்றச் சட்டத்தை நிறைவேற்றி, வரலாற்றில் முதல்முறையாக, தேசியத் திட்டம், இலக்குமயப்பட்ட வேலைத் திட்டம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றிற்குள் ஆட்சி நடைபெறும் சூழலை உருவாக்குதல், அரச நிதி முகாமைத்துவ சட்டத்தினை நிறைவேற்றியதன் மூலம் நாட்டில் முறையான நிதி ஒழுக்கத்தை ஏற்படுத்துதல் போன்ற திட்டங்கள் ஜனாதிபதியினால் செயற்படுத்தப்பட்டவையாகும்.
83 புதிய சட்டங்கள் மற்றும் சட்ட வரைவுகளை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து இந்நாட்டிற்குத் தேவையான சட்ட சீர்திருத்தங்களை மேற்கொள்ளல், ஊழலை ஒழிப்பதற்காக, சர்வதேச தரத்துடன் கூடிய ஆசியாவிலேயே மிகவும் சக்திவாய்ந்த ஊழல் எதிர்ப்பு சட்டத்தை அறிமுகப்படுத்தல், இந்நாட்டின் 20 இலட்சம் பேருக்கு முழு உரிமையுள்ள காணி உறுதிப்பத்திரங்களை வழங்குதல் போன்ற மக்களுக்கான திட்டங்கள் எடுத்துக்காட்டான விடயங்கள் ஆகும்.
மேலும், குறைந்த வருமானம் பெறும் நகர்ப்புற அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு அந்த வீடுகளின் உரிமையை வழங்குதல், சமுர்த்தியை விட மூன்று மடங்கு நிதி ஒதுக்கீடுகளைச் செய்து,பொருளாதார நெருக்கடியினால் மிகவும் பாதிக்கப்பட்ட 27 இலட்சம் மக்களுக்கு “அஸ்வெசும” நலன்புரித்திட்டத்தை ஆரம்பித்தல், பொருளாதார டிஜிட்டல் மயமாக்கல் போன்றன முக்கியமானவையாகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று முன்தினம் (17) அனுராதபுரத்தில் நடைபெற்ற கன்னி ஜன பேரணியில் மும் மொழியிலான புதிய பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பாடல் ஏற்கனவே சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
ரணில் விக்ரமசிங்கவின் சேவைகளை நாட்டுக்கு பெற்றுக் கொடுப்பது பிரஜைகளின் பொறுப்பு என்றும், அதை காக்க கவனமுடன் செயற்பட வேண்டும் என்றும் ‘ஃபோகஸ் குரூப்’ பிரஜைகளுக்கு வலுவாகப் பரிந்துரைத்து இந்தப் பாடலை உருவாக்கியுள்ளது.
இந்த பாடலை இளம் தலைமுறை பாடகியான எரண்தி மதுஷிகா பாடியுள்ளார், இவர் இதற்கு முன்பு பிரபல பாடலான அரகலய காலத்து “அபி சீருவென் ” எனும் பாடலைப் பாடியுள்ளார்.
தேசிய நல்லிணக்க இளைஞர் நிகழ்ச்சிக்காக (Youth Vote Force) “அபி சீருவென் பாடல்” முதன் முதலில் மறைந்த அமைச்சர் மங்கள சமரவீரவினால் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






















வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
