மன்னாரில் மறை மாவட்ட ஆயர் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்ட விசேட புத்தாண்டு திருப்பலி
புத்தாண்டு திருவிழா திருப்பலி மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இமானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் மன்னார் புனித செபஸ்ரியார் பேராலயத்தில் இன்று காலை 6 மணியளவில் கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.
சுகாதார நடை முறைகளை பின்பற்றி முககவசங்கள் அணிந்த வண்ணம் ஒரு தொகுதி கிறிஸ்தவ மக்கள் திருப்பலியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் காலை 6 மணியளவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இமானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் குருக்கள் இணைந்து திருவிழா திருப்பலினை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக் கொடுத்துள்ளனர்.
திருப்பலியின் போது ஆலயத்திற்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் விசேட பாதுப்பை வழங்கியுள்ளனர்.
அதே நேரம் மக்களின் ஆன்மிக நலனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பங்குகளிலும் குறிப்பிட்ட நேரங்களில் குறிப்பிட்ட அளவு மக்களின் பங்கு பற்றுதலுடன் திருப்பலிகள் நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதேவேளை மன்னார் மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் நள்ளிரவு திருப்பலி இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam