வடக்கு - கிழக்கில் பௌத்த மரபுரிமைகளைப் பாதுகாப்போம்! இன்று விசேட கூட்டம் (Video)
வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் பௌத்த மரபுரிமைகளைப் பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் விசேட கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.
சாசனத்தைப் பாதுகாப்பதற்கான உலகளாவிய சிங்கள கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இன்று (29.03.2023) கொழும்பில் இந்த கூட்டம் நடத்தப்படவுள்ளதாக, வட மாகாணத்தின் பிரதான பௌத்த தேரர், கல்கமுவே சந்தபோதி தேரர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வடக்கு மற்றும் கிழக்கில்,பௌத்த மரபுரிமைகள் சேதமாக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பௌத்த மரபுரிமைகள்
இதற்கமைய பௌத்த மரபுரிமைகள் பாதுகாப்பதற்கு முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது ஆராயப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் வடக்கு மற்றும் கிழக்கு பௌத்த அமைப்புகள், பௌத்த பிக்குகள், பௌத்த அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் இணைந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
