வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விவகாரம்! சுவிஸ் இந்து சைவத்திருக்கோவில்களின் ஒன்றியம் கண்டனம்
வவுனியா - நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் இடித்தழிக்கப்பட்டமைக்கு சுவிட்சர்லாந்து இந்து சைவத் திருக்கோவில்களின் ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் தொன்மையை சிதைக்கும் வகையிலும்,சைவ மக்களின் நம்பிக்கையை இழிவுப்படுத்தும் வகையிலும் வவுனியா வெடுக்குநாறிமலையிலுள்ள ஆதிலிங்கேஸ்வரர் திருத்தல புனித சின்னங்கள் அழிக்கப்பட்டமை புலம்பெயர் நாடுகளில் உள்ள சைவ மக்களின் வருத்தத்தினையும்,இலங்கை அரசு மீதான அவநம்பிக்கையை மீண்டும் தோற்றுவிப்பதாக அமைந்துள்ளதாகவும் அறிக்கையொன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கை பிரதி ஆங்கிலம் மற்றும் ஜேர்மன் மொழியில் சுவிஸ், மற்றும் இந்தியத் தூதுவராலயங்களுக்கும், மனித உரிமைகள் அமைப்பிற்கும் அனுப்பி வைக்கப்படுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக ஒன்றியத்தினால் வெளியிடப்பட்டுள்ள கண்டன அறிக்கையின் பிரதி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.


இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri
