பூநகரியில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்க விசேட கூட்டம்
கிளிநொச்சி - பூநகரியில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்க மாவட்ட அபிவிருத்தி குழுவின் அனுமதி வழங்கும் விசேட கூட்டம் இன்று (13.06.2023) கிளிநொச்சி மாவட்டச் செயகத்தில் இடம்பெற்றது.
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் நேற்று இடம்பெறும் நிலையில், குறித்த கூட்டம் அபிவிருத்திக்குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் காலை 9 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.
அதானி குடும்பத்தின் முதலீட்டில் பூநகரி கௌதாரிமுனை பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள குறித்த காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்திற்கு மாவட்ட அபிவிருத்தி குழு இரண்டு கூட்டங்களில் குறித்த நிலையத்தின் நன்மை தீமைகள் மற்றும் அபிவிருத்திகள் உள்ளிட்ட விடயங்கள் ஆராயப்பட்ட பின்னர் அனுமதி வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது.
அந்த வகையில் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்து முரண்பாட்டினால் இடை நிறுத்தப்பட்டு இனிவரும் காலங்களில் இடம்பெறுகின்ற கலந்துரையாடலில் தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், எஸ் சிறிதரன், அங்கஜன் இராமநாதன், அதானி குழுமத்தின் பிரதிநிதிகள், உயர் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 3 நாட்கள் முன்

11 துப்பாக்கிகள், 40 கத்திகள்.,100 பேர் கைது! பிரித்தானிய பொலிஸாரின் முன்னெச்சரிக்கை எதற்காக? News Lankasri
