பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் ஓட்டமாவடியில் விசேட கூட்டம்
நாட்டில் ஜனவரி பதினோராம் திகதி முதலாம் தவணைக்கான பாடசாலைகளை ஆரம்பிக்கும் நிலையில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அதிகாரிகள் மற்றும் சுகாதார திணைக்களத்தினருடனான விசேட கூட்டம் வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் நடைபெற்ற இந்த விசேட கூட்டத்தில் வைத்தியர் ஏ.எல்.ஏ.கசீனா, ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.அஹ்சாப், பிரதேச பாடசாலை அதிபர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
ஓட்டமாவடி பிரதேசத்தில் கொரோனா தொற்று காரணமாக சில வீதிகள் முடக்கப்பட்டுள்ள நிலையில் தனிமைப்படுத்தல் பகுதியில் இருந்து வரும் மாணவர்களை பாடசாலைகளில் அனுமதிக்க கூடாது.
அத்தோடு காய்ச்சல், தடுமல், உணர்வின் வாசனையினை உணர முடியாதவர்கள் இருப்பின் அவர்களையும் அனுமதிக்காத வண்ணம் செயற்பட வேண்டும்.
தற்போதைய கொரோனா காலத்தில் மாணவர்கள் கை கொள்ள வேண்டிய விடயங்கள், பெற்றோர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், அதிபர், ஆசிரியர்கள் நடந்து கொள்ள வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்ட வழிகாட்டல் அறிவுறுத்தல்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதுடன், கொரோனா பரவலைத் தடுப்பதற்காக எல்லோரும் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் கூறப்பட்டது.
மேலும் ஓட்டமாவடி பிரதேசத்தில் டெங்கு தாக்கமும் அதிகரித்து காணப்படும் நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி பெற்றோர்கள் மற்றும் பிரதேச சமூக மட்ட அமைப்புக்கள் என்பவற்றினை இணைத்து பாடசாலையினை சுத்தம் செய்து டெங்கு புகை விசிறில் நடவடிக்கையினை மேற்கொள்வதற்கு அதிபர்கள் உடனடியாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
நீண்டகாலமாக மாணவர்களுடைய கல்வி நடவடிக்கையினை தொடர்ச்சியான முறையில் முன்னெடுக்கப்படாமல் அனைத்து மாணவர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இம்முறை மாணவர்களின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கென முழு முயற்சி எடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கு அனைத்து மாணவர்களும் பெற்றோர்களும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri