கிராம மட்ட அலுவலர்களுடன் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் விசேட கலந்துரையாடல்
கிராமங்களில் பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் அவர்களுக்கான தேவைகள் குறித்து ஆராய்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு கிராம மட்டங்களில் கடமையாற்றும் அலுவலர்களுடன் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் விசேட கலந்துரையாடல்.
கிளிநொச்சி மாவட்டத்தில் கிராம மட்டங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலக திறன் விருத்தி மண்டபத்தில் கடந்த மாதம் 14 ம் திகதி நடைபெற்றிருந்தது.
இக் கலந்துரையாடலின் போது கிராம மட்டத்தில் இனங்காணப்படும் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பாக அறிந்து அவற்றை முடிவுறுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்வதற்காகவும் அபிவிருத்தித் திட்டங்கள், நிர்வாகச் செயற்பாடுகள், அரசின் புதிய கொள்கை வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச்செல்வதற்கான விடயங்கள் குறித்தும் கடமையின் பொருட்டு உத்தியோகத்தர்கள் எதிர்கொள்கின்ற இடர்பாடுகள் தொடர்பிலும் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டிருந்தன.
அதன் தொடர்ச்சியாக கிராம ரீதியாக கிராம மட்டங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடல்களை மாவட்டச்செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் நடாத்தி வருகின்றார்.
உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam
குணசேகரன் சதித்திட்டம், சக்தியிடம் ஜனனி சொன்ன வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது நாளைய ப்ரோமோ Cineulagam