உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு குறித்து விவாதிக்க விசேட கூட்டம்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு குறித்து விவாதிக்க ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை, அவசரக்கால சிறப்பு பொதுச் சபை கூட்டத்தை நடத்த வாக்களித்துள்ளது.
திங்கட்கிழமை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள இந்த கூட்டத்தில், 193 உறுப்பு நாடுகளும் தாக்குதல் குறித்து தங்கள் கருத்துக்களை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்படும்.
இந்த கூட்டத்திற்கு எதிராக ரஷ்யா வாக்களித்தது, எனினும் குறிப்பிட்ட ஐக்கிய நாடுகள் தீர்மானத்தின் கீழ் அந்த நடவடிக்கையை வீட்டோ செய்ய முடியவில்லை.
"அமைதிக்கான ஐக்கியம்" என்று அழைக்கப்படும் இந்த தீர்மானம், ஐந்து நிரந்தர
உறுப்பினர்களான (ரஷ்யா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் சீனா)
அமைதியை நிலைநிறுத்துவதற்கு எவ்வாறு இணைந்து செயல்படுவது என்பதை ஏற்றுக்கொள்ள
முடியாவிட்டால், பாதுகாப்புச் சபை, உறுப்பு நாடுகளுடன் இணைந்து பொதுச்சபையுடன்
ஒரு சிறப்பு அமர்வை அழைக்க அனுமதிக்கிறது.