ஜனாதிபதி மற்றும் கூட்டமைப்பிற்கிடையில் விசேட சந்திப்பு (VIDEO)

Colombo M A Sumanthiran Ranil Wickremesinghe Sri Lanka Tamil National Alliance
By Rakesh Aug 03, 2022 03:20 PM GMT
Report

நாட்டில் பொருளாதார, சமூக ஸ்திரத்தன்மையை உருவாக்குவதற்கான சர்வ கட்சிகளின் தேசிய வேலைத்திட்டத்தைத் தயாரிக்கும் பணிகளுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையான ஆதரவை வழங்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதியின் அழைப்புக்கு இணங்க அவரைக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவினர் இன்று மாலை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

சுகவீனம் காரணமாகக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தச் சந்திப்பில் பங்கேற்கவில்லை. அதேவேளை, தவராசா கலையரசன் எம்.பியும் இதில் கலந்துகொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.


சந்திப்பில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்

மேலும் குறித்த சந்திப்பில் கூட்டமைப்பின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறிதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன், எஸ்.வினோநோகராதலிங்கம், இராசமாணிக்கம் சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம் ஆகியோர்  பங்கேற்றுள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தில் ஒன்றரை மணித்தியாலங்கள் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் பிரதமர் தினேஷ் குணவர்தனவும் கலந்துகொண்டுள்ளார்.

ஜனாதிபதி மற்றும் கூட்டமைப்பிற்கிடையில் விசேட சந்திப்பு (VIDEO) | Special Meeting Between The President Federation

மேற்படி சந்திப்பு தொடர்பில் கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் கருத்து தெரிவிக்கையில்,

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா, ஜனாதிபதியிடம் தெரிவிக்கும்படி கூறிய விடயங்களை நான் அப்படியே ஜனாதிபதியிடம் கூறினேன். அதற்கமைய சர்வகட்சிகளின் தேசிய வேலைத்திட்டத்தைத் தயாரிக்கும் பணிகளுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையான ஆதரவை வழங்கும் என்று தெரிவித்தேன்.

தேசிய வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்ட பின்னர் அடுத்த கட்டம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம் எடுக்கும் என்றும் ஜனாதிபதியிடம் தெரிவித்தேன். அரசமைப்பின் 22ஆவது திருத்தம், புதிய அரசமைப்பு, தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பிலும் இதன்போது பேசினோம்.

ஜனாதிபதி மற்றும் கூட்டமைப்பிற்கிடையில் விசேட சந்திப்பு (VIDEO) | Special Meeting Between The President Federation

உடனடிப் பிரச்சினைகள் சம்பந்தமாகப் பேசும்போது தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்தோம். இந்தக் கோரிக்கையைத் தான் நிறைவேற்றுவதாக ஜனாதிபதி எம்மிடம் உறுதியளித்தார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணையை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்றும் கோரினோம். அதற்கும் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்தார்.

காணி விவகாரம் தொடர்பிலும் பேசினோம். வடக்கு, கிழக்கில் தொல்லியல் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றால் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. இதை உடனடியாகத் தடுத்து நிறுத்தும்படியும், ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவிக்குமாறும் கோரினோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவதாகவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவிக்கையில்,

போரால் பாதிக்கப்பட்ட வடக்கு,கிழக்கு பகுதிகள் மீது கவனம் செலுத்துமாறு விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்.உங்களுக்கு ஆதரவாக செயல்பட வேண்டுமென்றால் நல்லெண்ணங்களை வெளிப்படுத்த வேண்டுமெனவும், அரசியல் கைதிகளின் விடுதலை, காணி பிரச்சினை போன்ற பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்த கருத்தினையும் ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார்.


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US