ரணில் - சஜித் இடையில் இடம்பெற்ற விசேட சந்திப்பு
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடந்துள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்பின் போது அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான விசாரணைகளை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை சம்பந்தமான இருவரும் விரிவாக கலந்துரையாடியுள்ளதுடன் கருத்துக்களை பரிமாறிக்கொண்டுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.
இதனடிப்படையில் ஆணைக்குழுவின் அறிக்கைக்கு எதிராக செயற்படவும் இதற்காக ஏனைய எதிர்க்கட்சி அரசியல் சக்திகளை இணைத்துக்கொள்வது சம்பந்தமாகவும் இணப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளது.
இரண்டு தலைவர்களுக்கும் இடையிலான இந்த பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் தனிப்பட்ட இடமொன்றில் நடைபெற்றுள்ளதுடன் சுமூகமான முறையில் இந்த சந்திப்பு நடத்ததாகவும் எதிர்க்கட்சித் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுத் தேர்தல் தோல்விக்கு பின்னர் இந்த இரண்டு தலைவர்களும் இரண்டு, மூன்று முறை தனிப்பட்ட ரீதியில் சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஆணைக்குழுவின் அறிக்கை சம்பந்தமாக இந்த சந்திப்பு நடந்துள்ளது.
நாட்டு நடப்பு | சிறப்பு நேரலை
கடும் நஷ்டத்தை நோக்கி ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam