நோர்வே தூதுவர் - சஜித் பிரேமதாச இடையே விசேட சந்திப்பு
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) மற்றும் நோர்வே தூதுவர் மே எலின் ஸ்டெனர்(May - Elin Stener) ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கை அரசியல் மற்றும் பொருளாதார செயற்பாடுகள் குறித்து இன்று (03) குறித்த சந்திப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து விளக்கமளித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர், அதிலிருந்து விடுபட தனது கட்சியின் திட்டங்கள் குறித்தும் விளக்கமளித்துள்ளதாக கூறப்படுகிறது.
முக்கியமான தேர்தல்
மேலும், இந்த ஆண்டு நாட்டின் அரசியலில் ஒரு முக்கியமான ஆண்டு என்றும், இந்த ஆண்டில் முக்கியமான தேர்தல் நடைபெறும் என்றும் நோர்வே தூதுவருக்கு சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள ஆட்சி முடிவடைந்து ஜனரஞ்சக அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் மீண்டும் ஒருமுறை நாட்டை மீட்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா நாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன, நோர்வே தூதரகத்தின் இரண்டாவது செயலாளர் 'ஜொஹான் பிஜெர்கெம் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |