மாங்குளம் பிரதேசத்தில் அமையவுள்ள விசேட முதலீட்டு ஊக்குவிப்பு வலயம்
மாங்குளம் பிரதேசத்தில் அமையவுள்ள விசேட முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் தொடர்பாக ஆராய்வதற்கான விசேட களவிஜயம் ஒன்று கடந்த திங்கட்கிழமை (15-07-2024) முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தலைமையிலான குழுவினர் மேற்கொண்டிருந்தனர்.
மாங்குளத்தில் 600 ஏக்கர் நிலப்பரப்பில் விசேட முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் உருவாக்கும் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யவுள்ள பிரதேசத்தினை பார்வையிட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக தீர்மானங்களை மேற்கொள்ளும் நோக்கில் அமைச்சரின் கள விஜயம் அமைந்திருந்தது.
இக்கள விஜயத்தில் முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் செயலாளர் M.M.
நயுமுதீன்,மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன், முதலீட்டு ஊக்குவிட்டுச்
சபை அதிகாரிகள், ஒட்டுசுட்டான் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும்
கலந்துகொண்டனர்.




மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
நல்ல வசூல் வேட்டை செய்யும் விஷ்ணு விஷாலின் ஆர்யன் பட வசூல்... 5 நாளில் செய்துள்ள கலெக்ஷன்... Cineulagam