மஹரகம துப்பாக்கிச் சூடு தொடர்பில் சிறப்பு விசாரணை!
மஹரகம, நாவின்ன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (7) உரையாற்றிய ஜனாதிபதி, கடந்த சில மாதங்களாக மஹரகம பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் எதுவும் பதிவாகாத சூழலில் நேற்றிரவு நடந்த துப்பாக்கிச் சூடு தனித்துவமானது என்று கூறியுள்ளார்
இது ஒரு அரசியல் சதியாக இருக்குமோ என்ற சந்தேகம் இருப்பதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு
நேற்று இரவு மஹரகம, நாவின்ன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இராணுவ கோப்ரல் ஒருவர் காயமடைந்துள்ளார்.
காயமடைந்த நபர் தற்போது மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூடு நடந்தது மஹரகம, நாவின்ன பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாக நேற்று இரவு 8 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 12 ஆம் நாள் திருவிழா



