பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்
சினோஃபார்ம் கோவிட் தடுப்பூசி மூலம் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஃபைசர் - பயோஎன்டெக் தடுப்பூசி, பூஸ்டராக அதாவது மூன்றாம் தடுப்பூசியாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்த்தன (Asela Gunawardena) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பல்கலைக்கழக மாணவர்களுக்கு கோவிட் தடுப்பூசியின் இரண்டாவது அளவு கிடைத்த 6 மாதங்களுக்கு பிறகு இந்த பூஸ்டர் அளவு வழங்கப்படும்.
பல்கலைக்கழக மாணவர்கள் தடுப்பூசி போடுவதைத் தாமதப்படுத்தினால் ஃபைசர் பூஸ்டர் அளவைப் பெறுவது தாமதமாகும்.
எனவே மாணவர்கள் அருகிலுள்ள பல்கலைக்கழகத்தின் மூலம் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri