பள்ளிவாசல் ஒன்றில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் விசேட விசாரணை
சிலாபம் தும்மலசூரிய யகம்வெல பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று பிற்பகல் தொழுகைக்கு வந்தவர்களிடம் மௌலவி ஒருவருக்கு செலுத்துவதற்காக பணம் வசூலிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள பாடசாலை தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் ஒன்று ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாக்குவாதம் மோதலாக மாறிய நிலையில், தாக்குதலில் இருவர் காயமடைந்து குளியாப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பள்ளிவாசல் நிர்வாகம் தொடர்பாக அவ்வப்போது ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்காக சிலாபம் பிரிவுக்கு பொறுப்பான தும்மலசூரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.