இலங்கை மக்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல்!
பண்டிகை காலத்தை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பிற்காக பொலிஸார் சில விசேட திட்டங்களை தயாரித்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பண்டிகை காலத்தில் மோசடிகளுக்கு ஆளாக வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினை விடுத்து அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்து உரையாற்றிய நிஹால் தல்துவா, பொது மக்கள் பல்வேறு பொருட்களை கொள்வனவு செய்யும் போது, பொருட்கள் பாவனைக்கு ஏற்ற நிலையில் உள்ளதா என்பதினை அவதானம் செலுத்த வேண்டும்.
மேலும், பொருட்களின் விலைகள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும், மோசடி விற்பனையாளர்களிடம் சிக்காமல் இருக்குமாறும் பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
போலி நாணயத்தாள்கள் புழக்கம்
இதேவேளை, விழாக் காலங்களில் போலி நாணயத்தாள்கள் புழக்கத்தில் விடப்படுவதாகவும், அது தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்குமாறும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும், அதிக அளவில் மக்கள் கூடும் இடங்களில் திருடர்கள் சுற்றித் திரியும் அபாயம் உள்ளதாகவும், அவ்வாறான இடங்களில் பணப்பைகளை கவனமாக வைத்துக் கொள்ளுமாறும் பொலிஸார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.
அத்துடன், சிறு குழந்தைகளுடன் பல்வேறு இடங்களுக்கு பொருட்களை கொள்வனவு செய்யச் சென்றால் தங்க ஆபரணங்களை அணிவிப்பதைத் தவிர்க்குமாறும் பொலிஸார் பொதுமக்களிடம் மேலும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் முதியவர்களுடன் சந்தைக்கு பயணிக்கும் போது ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்காக முகக்கவசம் அணிந்திருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மோட்டார் சைக்கிள் பாதுகாப்பு தலைக்கவசங்களை மோட்டார் சைக்கிள்களில் அணிந்து கொள்ளுமாறும், தேவையற்ற விதத்தில் வெளியில் பயணிக்க வேண்டாம் என்றும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வானிலை நிலவரம்
மேலும் வெளியில் தெரியும் வகையில் பெறுமதியான பொருட்கள் எதனையும் வாகனத்தின் உள்ளே விட்டுச் செல்ல வேண்டாம் என பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதேவேளை, வீட்டை விட்டு வெகுதூரம் சென்றால் அதனை சமூக ஊடகங்களில் பகிரங்கப்படுத்த வேண்டாம் எனவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், தொலைதூர வாகனங்களை ஓட்டும் போது, அப்பகுதிகளில் வானிலை நிலவரம் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என, பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்யும் விசேட நடவடிக்கையொன்று நடைமுறைபடுத்தப்படவுள்ள நிலையில், எக்காரணம் கொண்டும் மதுபோதையில் வாகனங்களை செலுத்த வேண்டாம் என பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.
அத்துடன், இவ்விழாக் காலங்களில் பல்வேறு கேளிக்கை பயணங்களில் ஈடுபடும் போது ஆபத்தான செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்குமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri
