நேரடி வர்த்தகம் குறித்து அதிவிசேட வர்த்தமானி வெளியீடு
நேரடி வர்த்தகத்தில் ஈடுபடும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் நுகர்வோர் விவகார அதிகார சபையில் பதிவு செய்ய வேண்டும் என வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இன்றைய தினம் (13.04.2023) நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த நிரியெல்லவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
வர்த்தமானி
குறித்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சூரிய ஒளி அமைப்புகள், தொலைபேசிகள் மற்றும் உதிரிப்பாகங்கள், தளபாடங்கள், காலணிகள், எழுதுபொருட்கள், சமையலறை பாத்திரங்கள் மற்றும் பாகங்கள், படுக்கை விரிப்புகள், மெத்தைகள் மற்றும் ஆயத்த ஆடைகள் ஆகியவற்றை விற்பனை செய்யும் அனைத்து நேரடி வர்த்தகர்களும், தங்களை நுகர்வோர் அதிகார சபையில் பதிவு செய்யக்கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பற்றுச்சீட்டுக்களின் பிரதி
அத்துடன், வர்த்தகர் ஒருவர், வாடிக்கையாளருக்கு விற்பனை பொருட்களின் விபரங்கள் அடங்கிய பற்றுச்சீட்டை அச்சிடப்பட்ட அல்லது மின்னணு வடிவில் வழங்க வேண்டும் குறித்த பற்றுச்சீட்டுக்களின் பிரதிகளையும் வர்த்தகம் தம்வசம் வைத்திருக்க வேண்டும்.
இந்தநிலையில், குறித்த பற்றுச்சீட்டில், விற்கப்பட்ட பொருட்களின் அளவு,
விற்கப்பட்ட பொருட்களின் ஒரு அலகு மதிப்பு, விற்கப்பட்ட பொருட்களின் மொத்த
மதிப்பு, தொகுதி எண், உத்தரவாத காலம், பெயர் மற்றும் முகவரி என்பன
அடங்கியிருக்கவேண்டும் என்றும் அதிகாரசபையின் தலைவர் வர்த்தமானியின் மூலம்
அறிவிக்கப்பட்டுள்ளது.




இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 18 மணி நேரம் முன்

பிரம்மபுத்திரா நதி இந்தியாவிற்குள் பாய்வதை சீனா நிறுத்த வேண்டும்! பாகிஸ்தான் விடுத்த கோரிக்கை News Lankasri
