கிளிநொச்சியில் வெடிபொருட்களை மீட்கும் நடவடிக்கையில் விசேட அதிரடிப்படையினர்(Photos)
கிளிநொச்சி - பரந்தனில் அடையாளம் காணப்பட்ட வெடிபொருட்களை மீட்கும் நடவடிக்கையில் விசேட அதிரடிப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் காணி உரிமையாளர்களால் கிணறு துப்புரவு செய்யும் பொழுது பல்வேறு வகையான வெடி பொருட்கள் மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கிணற்றில் இருந்து வெடிபொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
வெடிபொருட்கள் மீட்பு
இதனை தொடர்ந்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் பார்வையிட்ட பின்னர் இன்று (21.08.2023)நீதிமன்ற அனுமதியுடன் சிறப்பு அதிரடி படையினரால் கிணற்றில் இருந்து வெடி பொருட்களை மீட்கும் அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது பல்வேறு வகையான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக சிறப்பு அதிரடிப்படையினர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |











அதிக அளவில் நஷ்டம்.., தான் விளைவித்த காய்கறியை வைத்து 10 ரூபாய்க்கு வெஜ் பிரியாணி வழங்கும் விவசாயி News Lankasri

படப்பிடிப்பில் கொண்டாட்டத்தில் இறங்கிய கார்த்திகை தீபம் சீரியல் பிரபலங்கள்... என்ன ஸ்பெஷல், போட்டோஸ் இதோ Cineulagam
