புதுவருடப்பிறப்பை முன்னிட்டு பூநகரி பிரதேசத்தில் விசேட உணவுப்பாதுகாப்பு பரிசோதனைகள்
புதுவருடப் பிறப்பை முன்னிட்டு யாழ்ப்பாணம் (Jaffna) - பூநகரிப்பகுதியில் விசேட உணவுப்பாதுகாப்பு பரிசோதனைகள் நடாத்தப்பட்டுள்ளன.
குறித்த பரிசோதனைகள், இன்று (11.04.2024) பூநகரி பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர் ஆ.ஜென்சன் றொனால்ட் தலைமையில் வாடியடி, ஞானிமடம், ஜெயபுரம், பல்லவராயன்கட்டு, நாச்சிக்குடா மற்றும் முழங்காவில் ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, பரிசோதனைகளில் கைப்பற்றப்பட்ட சுகாதாரத்துக்கு கேடான பொருட்கள் அழிக்கப்பட்டதுடன் கைப்பற்றப்பட்ட ஒரு தொகுதி உணவுப்பொருட்களை சட்டநடவடிக்கைக்கு உட்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சட்ட நடவடிக்கை
அத்துடன், வீதியோரங்களில் சுகாதாரமற்ற முறையில் நடைபெறும் பழச்சாறு, வடை மற்றும் குளிர்பான வியாபாரம் செய்வோர் எச்சரிக்கப்பட்டதோடு சரியான சுகாதார பாதுகாப்பு முறைகளைக் கடப்பிடிக்க வலியுறுத்தப்பட்டனர்.

அதேவேளை, சுகாதார பாதுகாப்பு முறைகளை மீறிச்செயற்படுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



மீனா மறைக்கும் விஷயம் என்ன, ஓபனாக கூறிய முத்து, கடும் ஷாக்கில் ரோஹினி.. சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம் News Lankasri