பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சுகாதார பரிசோதகர்கள் விசேட பரிசோதனை
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் விசேட பரிசோனைகளை இன்று (13.01.2026) முன்னெடுத்திருந்தனர்.
களுவாஞ்சிகுடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட குழுவினரே இவ்வாறு பரிசோதனைகளை முன்னெடுத்திருந்தனர்.
ஆராயப்பட்ட விடயங்கள்
இதன்போது பொருட்கள் மற்றும் பண்டங்களின் உற்பத்தி திகதி, காலாவதி திகதி, பொருட்களின் தரம் போன்ற பல விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்திருந்தனர்.
பட்டிருப்புத் தொதியின் வர்த்தக நகராக விளங்கும் களுவாஞ்சிகுடி நகரில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் பண்டிகைக் காலங்களில் அப்பகுதியில் சனக்கூட்டம் மேலும் அதிகரித்துக் காணப்படுவதோடு, வியாபாரங்களும் களைகட்டியுள்ள நிலையில் இந்த விசேட பரிசோதனை திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.



சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 12 நிமிடங்கள் முன்
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri