நுவரெலியாவில் மீண்டும் விசேட போதைப்பொருள் சுற்றிவளைப்பு
நுவரெலியாவில் மீண்டும் விசேட போதைப்பொருள் சுற்றிவளைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் மீண்டும் புதிய திட்டத்துடன் விசேட சுற்றிவளைப்புக்கள் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான 'யுக்திய' சுற்றிவளைப்பு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் நுவரெலியா மகிந்த மாவத்த பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் ஆதரவுடன் குறித்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சுற்றிவளைப்பு நடவடிக்கை
இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை இன்றையதினம் (04) அதிகாலை 5 மணி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும் நுவரெலியா நகரில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றவர்கள் தொடர்பாகவும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் பிரதான நகரில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடுபவர்களையும் அவர்கள் கொண்டு செல்லும் பொதிகளையும் அடிக்கடி பரிசோதனை செய்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam