அரச பெருந்தோட்டம் சார்ந்த நிறுவனங்களுடன் விஷேட கலந்துரையாடல்!
பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் கீழ் உள்ள அரசுக்கு சொந்தமான பெருந்தோட்டங்கள் சார்ந்த நிறுவனங்களின் தற்போதைய நிலை குறித்து விஷேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் (06) நடைபெற்றுள்ளது.
முக்கிய விவகாரங்கள்
இந்த கலந்துரையாடலில், அந்த நிறுவனங்களின் நிலையை மேம்படுத்தி தேசிய பொருளாதாரத்திற்கு அதிக பங்களிப்பு செய்தல், திறமையான அரச சேவையின் மூலம் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுதல் மற்றும் வரவு செலவு முன்மொழிவுகள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதன்போது பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த விதயாரத்ன (K.V. Samantha Viddyarathna), பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், அமைச்சின் செயலாளர் மற்றும் நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சிந்துநதி நீர் நிறுத்தத்தால்.., பாகிஸ்தான் நடிகைக்கு தண்ணீர் போத்தல்களை அனுப்பிய இந்திய ரசிகர் News Lankasri
