மட்டக்களப்பில் பருவப் பெயர்ச்சி காலநிலை தொடர்பாக விசேட கலந்துரையாடல்
அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் பருவப் பெயர்ச்சி காலநிலை தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்ரினா முரளீதரன் தலைமையில் இன்று (18.01.2024) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பருவப் பெயர்ச்சி மழையினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பாக இதன்போது அரசாங்க அதிபரினால் அதிகாரிகளிடம் விரிவான விளக்கங்கள் கோரப்பட்டதுடன் இது தொடர்பாக விரிவான கலந்துரையாடலும் இடம்பெற்றுள்ளன.
அரசாங்க அதிபரின் ஆலோசனை
மேலும், தாழ் நிலங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளல் மற்றும் பட்டிருப்பு பாலம் அருகில் சல்வீனியா (ஆற்று வாழை) நிறைந்து வெள்ள நீர் வடிந்தோடுவதற்கு தடையாக இருந்தமையினால் அவை அகற்றப்பட்டமை போன்ற விடயங்கள் தொடர்பாகவும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன், உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக வடிகான்களை துப்பரவு செய்து வெள்ள நீரை வடிந்தோட செய்வது மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்துவித நிவாரண உதவிகளையும் உடனுக்குடன் வழங்க வேண்டுமென இதன்போது மாவட்ட அரசாங்க அதிபரினால் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam