மலையக மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக்கொடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் (Photos)
மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கான பொறிமுறை தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது இன்று(07.09.2023) இடம்பெற்றுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மட்டும் அல்ல பெருந்தோட்டங்களில் உள்ள அனைவருக்கும் காணி உரிமை அவசியம் என இதன்போது அமைச்சர் கூறியுள்ளார்.
மேலும், அதற்கான பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில், அது துரிதப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்துவத்தையும் எடுத்துரைத்துள்ளார்.
புதிய வீடுகளுக்கான காணி உரிமை
பெருந்தோட்டப் பகுதிகளில் ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளுக்கும் காணி உரித்து பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண, நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்ற இச்சந்திப்பில் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் எஸ்.சமரதிவாகர, காணி அமைச்சின் செயலாளர், காணி மறுசீரமைப்பு குழுவின் தலைவர், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி, காணி ஆணையாளர், மற்றும் துறைசார் அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.



பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
